கோவையில் மகளிர் உரிமை தொகையில் வாழ்வாதரம் நடத்தி வரும் மூதாட்டிக்கு வாக்குரிமை கிடைக்காததால் அவர் கண்ணீர் விட்டு அழுதார். கோவை சுகுணாபுரம் பாலமுருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் குர்ஷித் பிவி (67). தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமை தொகையில் வாழ்வாதாரம் நடத்தி வருகிறார்.

இன்று தனது தங்கையுடன் சுகுணாபுரம் பள்ளியில் வாக்களிக்க வந்தார். ஆனால் அவரது பெயர் வாக்களர் பட்டியலில் இல்லாததால் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால், அரசின் அனைத்து சலுகைகளும் கிடைத்த நிலையில், வாக்குரிமை கிடைக்கவில்லை என கூறி அவர் கண்ணீர் விட்டு அழுதார்.