விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சஞ்சீவி மலை அமைந்துள்ளது. இது ராமாயணத்தின் போது காயமடைந்தவர்களை உயிர்பிக்க அனுமான் தூக்கிச் சென்ற மலையில் இருந்து சிதறிய ஒரு பாகம் என பக்தர்கள் நம்புகின்றனர். ஆயிரம் அடி உயரம் கொண்ட இந்த மலையின் உச்சியில் பெரிய பாறை ஒன்று ராமர் கல் என்று அழைக்கப்படுகிறது.

அதே போன்று அதன் அருகே ராமர் கோயிலும் அனுமானின் பாதமும் உள்ளது. இந்நிலையில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அயோத்தியில் இருந்து கொண்டுவரப்பட்ட காவி கொடியை ஆயிரம் அடி உயரம் கொண்ட மலை உச்சியில் ராமர் கல் அருகே ஹிந்து அமைப்பினர் ஏற்றியுள்ளனர்.