100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஊதியம் பெற, வங்கிக் கணக்குடன் ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும்; இல்லையென்றால் வங்கிக் கணக்கில் ஊதியம் செலுத்தப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் அடிப்படையிலான கட்டண முறைக்கு மாறுவதற்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு அளித்த அவகாசம் 2023 டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது. சிக்கல்கள் உள்ள இடங்களில் மட்டுமே மத்திய அரசு விதிவிலக்கு அளித்துள்ளது.

நாட்டில் 25.89 கோடி தொழிலாளர்கள் உள்ள நிலையில், 13.48 கோடி பேர் மட்டுமே ஆதார் பதிவை முடித்துள்ளனர். இந்நிலையில் மத்திய அரசின் அறிவிப்புக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ஆதார் இணைப்பு கட்டாயம் என்றால் 100 நாள் வேலைத் திட்டத்தின் நோக்கம் சீர்குலைந்துவிடும் எனக் கூறிய அவர், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மத்திய பாஜக அரசு படிப்படியாக சிதைப்பதாக விமர்சித்தார்.