
சச்சின் சதங்கள் சாதனையை பாதுகாக்க விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ மீது குற்றச்சாட்டை வைக்கின்றனர் கோலி ரசிகர்கள்..
ஆசிய கோப்பை 2023க்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் இருந்து விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பையை மனதில் வைத்து பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது. ஆனால் ரசிகர்களோ பிசிசிஐ மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை காப்பாற்ற கிங் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

விராட் கோலி மெதுவாக 100 சர்வதேச சதங்களை நெருங்கி வருகிறார். இதுவரை 3 வகையான கிரிக்கெட்டில் 77 சர்வதேச சதங்கள் அடித்துள்ளார் கிங் கோலி. ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கோலி சிறப்பாக பேட்டிங் செய்து அபார சதமடித்தார். தற்போது சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் என்ற சாதனையை முறியடிக்க ஒரே ஒரு வீரரால் மட்டுமே முடியும். அது விராட் கோலி தான். ஏனெனில் தற்போது கிரிக்கெட் ஆடிவரும் வீரர்களில் அனைவருமே 50 சதத்திற்கும் கீழே உள்ளனர். 2023ல் மட்டும் கோலி இதுவரை 5 சர்வதேச சதங்களை அடித்துள்ளார். சச்சின் சாதனையை சமன் செய்ய கோலிக்கு இன்னும் 23 சதங்கள் தேவைப்படுகிறது. அது டி20ஐ மற்றும் டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் சரி, ஒருநாள் கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி.. சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது. விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் இதுவரை 47 சதங்களை விளாசியுள்ளார். இன்னும் 2 சதங்கள் அடித்தால் சச்சின் சாதனையை (49 சதங்கள்) சமன்செய்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த பத்தாண்டுகளில் (2011-2020), கோலி இந்தியா விளையாடிய ஒரு நாள் போட்டிகளில் மட்டும் 20 போட்டிகளில் இருந்து விலகி இருந்தார். ஆனால் 2021-2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், கோலி ஓய்வு என்ற பெயரில் 21 போட்டிகளில் ஓரங்கட்டப்பட்டார் என ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் தான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க முடியாத வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் பிசிசிஐ அவருக்கு ஓய்வு அளித்துள்ளதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு ரசிகர் X (முன்னதாக ட்விட்டர்) இல் எழுதினார், “ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இருந்து விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கரின் சதத்தை காப்பாற்ற பிசிசிஐயும், மும்பை லாபியும் தங்களால் இயன்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளன” என குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் உலக கோப்பையை கருத்தில் கொண்டு பணிச்சுமை காரணமாக தான் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சில ரசிகர்கள் அவர்கள் உண்மையிலேயே சச்சின் டெண்டுல்கரின் சாதனையைப் பாதுகாக்க விரும்பினால், விராட் கோலி பார்மில் இல்லாதபோது டெஸ்டில் இருந்து நீக்கியிருப்பார்கள் என்றும் கூறி வருகின்றனர்.
சச்சினின் இந்த சாதனை ஏற்கனவே முறியடிக்கப்பட்டுள்ளது :
2023 ஆசிய கோப்பையில் விராட் கோலி 13,000 ஒருநாள் ரன்களை கடந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து, ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 13,000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார். கோலி 267 ஒருநாள் இன்னிங்ஸ்களில் இந்த சிறப்பு எண்ணிக்கையைத் தொட்டார், அதேசமயம் சச்சின் டெண்டுல்கர் 321 போட்டிகளில் விளையாடி ஒருநாள் போட்டிகளில் 13,000 ரன்களை எட்ட வேண்டியிருந்தது. கோலி அவருக்கு முன்பே இந்த சிறப்பு நிலையை அடைந்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் 49 சதங்களுடன் 18,426 ரன்களும், விராட் கோலி 47 சதங்களுடன் 13,027 ரன்களும் எடுத்துள்ளார்..
https://twitter.com/Mahin__sayss_/status/1704125617594413262
https://twitter.com/ReignOfVirat/status/1703798308823785884
Whole Mumbai lobby is trying to stop Kohli from breaking Sachin's record. That's why he rested again today. #ViratKohli pic.twitter.com/AZwn7Xo2EP
— Lokesh Saini🚩 (@LokeshVirat18K) September 15, 2023
BCCI is planning to cancel World Cup to stop Virat Kohli from breaking Sachin Tendulkar record : Kohli fans😂😂
If they really wanted to preserve Sachin Tendulkar record, they would have dropped Virat Kohli from the Test when he was going through rough patch #ViratKohli— Hadron 💥🕉️ (@AkkiSrt) September 19, 2023
Virat Kohli Missing ODI match:
2011 to 2020 – 20 times
2021 to 2023 – 23 times*
He's fit and don't want rest then why ?
To protecting sachin record or what ???
Someone plz clarify#ViratKohli𓃵 pic.twitter.com/uWXvhYmoBQ— gudesh priyadarshi (@iamGpriyadarshi) September 19, 2023
There is good planning so that Virat Kohli does not break Sachin's record.#ViratKohli #ViratKohli𓃵 #supportkohli
Trend #supportkohli and #supportsamson
Change Mumbai lobby in Bharat squad pic.twitter.com/AjW52jiwkH— BHARAT (@techfac79624304) September 19, 2023