பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளியான படம் டிராகன். இந்த படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. ஓ மை கடவுளே படத்தின் மூலமாக இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை பிரதீப் ரங்கநாதனோடு இணைந்து அனுபாமா பரமேஸ்வரன,  கயாடு லோகர், மிஷ்கின்,  உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள். கடந்த வாரம் இந்த படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று மாபெரும் அளவில் வெற்றி அடைந்தது.

இந்த நிலையில் 7 நாட்கள் வெற்றிகரமாக கடந்துள்ள இந்த படம் உலக அளவில் 80 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ளது. மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் 100 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் என்று கூறப்படுகிறது.