
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டோராடூன் பகுதியில் நடந்த ஒரு கோர விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு அது தொடர்பான காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி நெஞ்சை பதற வைப்பதாக அமைந்துள்ளது. அதாவது இன்னோவா காரில் வாலிபர்கள் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சாலையில் சென்றுள்ளனர். இந்த காரில் 3 பெண்கள் உட்பட 6 பேர் இருந்துள்ளனர். இவர்கள் அதி வேகமாக சாலையில் சென்ற நிலையில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்னால் அதிவேகமாக மோதினர்.
இந்த பயங்கர விபத்தில் காரின் மேற்கூரை பெயர்ந்ததால் இருவர் தலைதுண்டித்து உயிரிழந்தனர். இந்தக் கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். இந்த விபத்தில் 3 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த நிலையில் அனைவருக்கும் வயது 20 முதல் 25-க்குள் இருக்கும். மேலும் மது போதையில் காரை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.