
தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மூலம், சுகாதாரத்துறையில் காலியாக உள்ள ஃபிட்டர் மற்றும் வெல்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்கள்: 21
விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.07.2025
பணியிட விவரங்கள்:
1. வெல்டர் (Skilled Assistant Grade – II – Welder)
காலியிடங்கள்: 1
கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் வெல்டர் பிரிவில் ஐ.டி.ஐ.
சம்பள அளவு: ரூ. 19,500 – 71,900
2. ஃபிட்டர் (Skilled Assistant Grade – II – Fitter)
காலியிடங்கள்: 20
கல்வித் தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஃபிட்டர் பிரிவில் ஐ.டி.ஐ.
சம்பள அளவு: ரூ. 19,500 – 71,900
வயது வரம்பு:
பொது பிரிவினருக்கு: 18 முதல் 32 வயதுக்குள் (01.07.2025 தேதியை அடிப்படையாகக் கொண்டு)
ஒதுக்கீட்டு பிரிவினருக்கு (SC, ST, SCA, MBC, BCM, BC): 59 வயது வரை தளர்வு வழங்கப்படுகிறது
தேர்வு முறை:
தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடக்கும்
ஐ.டி.ஐ மதிப்பெண்கள் – 60%
பத்தாம் வகுப்பு/பிளஸ் 2 மதிப்பெண்கள் – 40%
விண்ணப்பதாரர்கள் https://mrbonline.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது பிரிவினருக்கு: ₹600
SC/ST/SCA/மாற்றுத்திறனாளிகள்: ₹300