தமிழகத்தில் 10, 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரிப்பது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் எமிஸ் இணையதள விவரங்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் எமிஸ் வலைத்தளத்தில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி மற்றும் புகைப்படம் உள்ளிட்ட 13 தகவல்கள் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஏதாவது திருத்தங்கள் இருந்தால் அதனை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்த பணிகளை நவம்பர் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்கள் அனைவரும் பகுதி ஒன்றில் தமிழை மொழிப்பாடமாக கட்டாயம் எழுத வேண்டும். இந்தப் பணிகளை தலைமை ஆசிரியர்கள் நேரடி கவனத்தில் கொள்ள வேண்டும். பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்களில் ஏதாவது தவறுகள் இருந்தால் சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்தான் முழு பொறுப்பு. எக்காரணத்தைக் கொண்டு மதிப்பெண் சான்றிதழ் வழங்கியிருக்கிறது திருத்தங்கள் செய்யக்கோரி தேர்வு துறைக்கு விண்ணப்பங்களை அனுப்பக்கூடாது என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.