ஒரு பெண்மணி கடந்த பத்து வருடங்களுக்கு முன்பாக கருத்தடை செய்த நிலையில் தற்போது மீண்டும் கர்ப்பமாக நினைக்கிறார். ஆனால் அது மிகவும் சிக்கலாக இருக்கும் நிலையில் அது குறித்த ஒரு செய்தியை தற்போது பார்ப்போம். “ஒரு தவறான முடிவு வாழ்நாள் முழுவதும் மனவலியைக் கொடுக்கக்கூடும்” என்பதற்கான ஒரு முக்கியமான உதாரணம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வலம்வந்த ஒரு மருத்துவக் காணொளியில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. பெண்கள் மருத்துவ நிபுணரும் பிரசவ நிபுணருமான டாக்டர் சுஷ்மா மோக்ரி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஒரு உண்மை சம்பவம் இதற்கு சாட்சி.

அவர் கூறுகையில், பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் தனது முதல் மகனை பெற்ற பிறகு, கணவர் மற்றும் மாமியாருடன் ஏற்பட்ட குடும்ப விவாதங்களால், உணர்ச்சி வசப்பட்டு கருத்தடை அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.

“அந்தச் சூழ்நிலையில் அவர் சலிப்புடன் முடிவெடுத்தார். மூன்று வருடங்கள் எதுவும் தெரியாத மாதிரி அமைதியாக இருந்தாலும், அதன் பின் வாழ்க்கை மாற்றமே தெரியத் தொடங்கியது” என்று டாக்டர் சுஷ்மா கூறுகிறார்.

இந்தக் குடும்பத்தின் ஒரே பிள்ளையான அந்த மகனுக்கு, தற்போது 10 வயதாகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவரது உடல்நிலை மோசமாகிவிட்டதாகவும், இரண்டாவது குழந்தையை பெற்றெடுக்க விரும்பும் ஆசை இப்போது அந்த தம்பதிகளுக்குள் உருவாகியுள்ளது என்றும் மருத்துவர் தெரிவிக்கிறார்.

பண்பட்ட கருத்தடை அறுவை சிகிச்சையை மீண்டும் திருப்பியமைக்க முயற்சிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், இதற்கான சிகிச்சை முறைகள் எளிதானவை அல்ல.

தற்போது பெண்ணின் வயது 38 ஆக இருப்பதால், கருப்பையின் முட்டை உற்பத்தி திறன் (AMH அளவு) குறைந்துவருகிறது.

சீரான கர்ப்பம் நிகழ இந்த தம்பதிகளுக்கு IVF (செயற்கை கர்ப்பம்) என்பது ஒரே விருப்பமாக உள்ளது.

ஆனால் இந்த சிகிச்சை மிகவும் செலவுடையது என்பது அனைவரும் அறிந்ததே.

மருத்துவ நிபுணரின் எச்சரிக்கை – உணர்ச்சியில் முடிவெடுக்க வேண்டாம். மேலும் எந்த ஒரு முடிவாக இருந்தாலும் நிதானமாக முடிவு எடுக்க வேண்டும் எனவும் தற்போது கர்ப்பமாக நினைக்கும் அந்த பெண்ணுக்கு 38 வயது ஆவதால் கண்டிப்பாக எந்த முறையில் குழந்தையைப் பெற்றாலும் அதில் சிக்கல் இருக்கிறது என்பதே டாக்டர் சுஷ்மாவின் கருத்தாக இருக்கிறது.