உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியில் ரவிசங்கர் என்ற 28 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் சொப்னா என்ற 25 வயது பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது சொப்னா 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
இதில் கணவன் மனைவிக்கு இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தகராறு ஏற்பட்டதால் கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக சொர்ணா தன்னுடைய தங்கையின் வீட்டிற்கு சென்று விட்டார். இது ரவிசங்கருக்கு கோபத்தை ஏற்படுத்திய நிலையில் சம்பவ நாளில் அவர் தன் மனைவியை பார்ப்பதற்காக அங்கு சென்றார்.
அங்கு அவர் தன்னுடைய மனைவியை சமாதானம் செய்வது போல் பேசுவது போல நாடகமாடி ஒரு தனி அறைக்கு அழைத்து சென்று கத்தியால் குத்தி கொடூரமான முறையில் கொலை செய்தார். கர்ப்பமாக இருக்கும் மனைவி என்று கூட பாராமல் வயிற்றில் இருக்கும் குழந்தையோடு கொடூரமாக துடிக்க துடிக்க அவர் கொன்றுவிட்டார்.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் ரவிசங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
