புதுச்சேரி பிரியதர்ஷினி நகரில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மூன்று சக்கர சைக்கிள் ஓட்டும் தொழிலாளி. கடந்த 2021-ஆம் ஆண்டு அந்தோணி 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து சித்திரவை செய்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் அந்தோணியை கைது செய்தனர்.

இந்த வழக்கு புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி அந்தோணிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு 4 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும் பரிந்துரை செய்துள்ளார்.