தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் தான் அரசுக்கு அதிக வருமானம் வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதன் பிறகு டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக மதுபானங்களை விற்பனை செய்வதாக புகார் எழுவதால் அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் டாஸ்மாக் கடைகளில் பில்லிங் மற்றும் க்யூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி போன்றவைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

அதாவது மதுபான கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுகிறது. இதன் காரணமாக தற்போது தமிழக அரசு அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது இனி கூடுதலாக மதுவை விற்பனை செய்தால் கடையின் மேற்பார்வையாளர் உட்பட அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.