இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடக்கும் போரில் மற்ற நாட்டை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி நேபாளத்தை சேர்ந்த 10 பேர் இந்த போரில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில். ஐநாவின் பொதுச்செயலாளர் அன்டோனியோ நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக நேபாளத்திற்கு சென்றுள்ளார்.

இதனிடையே அன்டோனியோ தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் இஸ்ரேல் ஹமாஸ் போரில் உயிரிழந்த பத்து நேபாள மாணவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிப்பதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் மனித உயிர்களைப் பாதுகாக்க வேண்டும். மக்களின் பாதுகாப்பு தான் முதன்மையானது” என்றும் பதிவிட்டுள்ளார்.