தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு 80 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு வித்யாதன் கல்வி உதவித்தொகை  வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை குறித்த முழு விவரங்கள் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த உதவி தொகை பெற குறைந்தபட்ச வருமானம் மற்றும் நடப்பு கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்றிருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அது மட்டும் இல்லாமல் இந்த உதவிதொகை பெறும் மாணவர்களுடைய பெற்றோர் வருமானம் 2 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.

மேலும் இந்த திட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பலன் பெறுவதற்கு அவர்கள் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தகுதியான மாணவர்கள்  www.vidyadhan.org  என்ற இனியாயத்தளத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.