
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) 2025–2026-ற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 6,180 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
டெக்னீசியன் கிரேடு 1 – சிக்னல்: 180 பணியிடங்கள்
டெக்னீசியன் கிரேடு 3 – டெக்னிக்கல் பணிகள்: 6,000 பணியிடங்கள்
டெக்னீசியன் கிரேடு 1 (சிக்னல்):
பிஎஸ்சி பட்டம் (இயற்பியல்/மின்னணுவியல்/கணினி அறிவியல்/IT/கருவியியல்) அல்லது தொடர்புடைய துறையில் டிப்ளமோ அல்லது பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
டெக்னீசியன் கிரேடு 3:
SSLC/10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், Foundryman/ Pattern Maker / Forger & Heat Treater போன்ற துறைகளில் ITI அல்லது அப்ரண்டிஸ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு (01.07.2025 அன்று அடிப்படையாகக் கொள்ளப்படும்):
கிரேடு 1: 18 முதல் 33 வயதுக்குள்
கிரேடு 3: 18 முதல் 30 வயதுக்குள்
வயது சலுகைகள்:
எஸ்சி/எஸ்டி: 5 வருடங்கள்
ஒபிசி: 3 வருடங்கள்
மாற்றுத்திறனாளிகள்: 10 வருடங்கள்
சம்பளம்:
கிரேடு 1 (சிக்னல்) – Pay Level 5: ₹29,200 முதல் ₹92,300 வரை
கிரேடு 3 – Pay Level 2: ₹19,900 முதல் ₹63,200 வரை
மேலும் 7வது ஊதிய ஆணையத்தின் படி ஏனைய கொடுப்பனவுகள் வழங்கப்படும்.
தேர்வு முறை:
1. CBT (Computer Based Test)
2. சான்றிதழ் சரிபார்ப்பு
3. மருத்துவ பரிசோதனை
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.rrbapply.gov.in
விண்ணப்ப தொடக்கம்: ஜூன் 28, 2025
விண்ணப்ப முடிவு: ஜூலை 28, 2025 – இரவு 11:59 மணி
முக்கிய குறிப்பு: விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கல்வித் தகுதி மற்றும் வயதுத் தகுதிகளை சரிபார்த்து, தேதிக்குள் விண்ணப்பிப்பது அவசியம்.