கர்நாடகாவில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுடைய கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக மருசின்சனா  திட்டம் என்னும் திட்டம் கடந்த வருடம் பட்ஜெட்டில் நிதியமைச்சரும் முதல்வருமான சித்தாராமையா அறிவித்தார். இந்த திட்டம் இந்த மாதத்தின் இரண்டாவது பாதியில் இருந்து தொடங்கப்பட உள்ளது. மொத்தம் 17 மாவட்டங்களைச் சேர்ந்த 282 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது .

இதன் மூலமாக மாணவர்களுடைய கற்றல் அளவுகளை கண்டறிந்து அவற்றை மேம்படுத்துவது போன்றவை ஒன்பதாம் வகுப்பில் செயல்படுத்தப்படும். இதற்கு மூன்று ஐந்து, ஏழு ஆகிய வகுப்புகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் கற்றல் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் பல்வேறு குழுக்களாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு வாரத்தில் மூன்று பாட வேலைகளும் சிறப்பு பயிற்சியும் வழங்கப்படும். சிறப்பு வகுப்புகளில் வயதுக்கு ஏற்ப கற்றல் அடைவுகள் இல்லாவிட்டால் அதை சரி செய்வதற்கு நடவடிக்கையும் எடுக்கப்படும். இதற்காக ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.