கலிபோர்னியாவில் உள்ள சேக்ரமெண்டோ அருகே ஒரு பெண் காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தனது கணவர் ஆண்ட்ரே டெம்ஸ்கி தன்னையும் தனது தாயையும் கடுமையாக தாக்கி வீட்டில் இருந்து வெளியே தள்ளி கதவை பூட்டி விட்டதாகவும் வீட்டிற்குள் தனது ஒரு வயது மகன் இருப்பதால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று ஆண்ட்ரே டெம்ஸ்கியை கைது செய்தனர். குழந்தையை தேடிய போது காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

ஒரு வயது குழந்தையின் தலையை தூண்டாக வெட்டி ஆண்ட்ரே டெம்ஸ்கி கொலை செய்துள்ளார். இது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.