இந்தியா மற்றும் தைவான் இடையேயான வேலைவாய்ப்பு ஒப்பந்தம் இறுதி கட்ட பேச்சு வார்த்தையில் உள்ள நிலையில் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தைவான் நாட்டில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் நிறுவனங்களில் ஊழியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது.

இதனால் வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை பணியமர்த்த அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ள நிலையில் இந்தியாவில் இருந்து பண்ணைகள், தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளில் சுமார் ஒரு லட்சம் பேரை பணியமர்த்த தைவான் நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் டிசம்பர் மாதத்தில் கையெழுத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு லட்சம் இந்தியர்களுக்கு இதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது.