தமிழக சட்டசபையில் நேற்று 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றினார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.  இதில் தகுதி உடைய பெண்களுக்கு தான் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் தங்களுக்கு நிதி கிடைக்காதோ என்ற அச்சம் பல பெண்களுக்கு ஏற்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

அரசு ஒதுக்கிய நிதியால் ஒரு கோடி பெண்களுக்கு தான் இந்த திட்டம் கிடைக்கும். தமிழகத்தில் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 2.11 கோடி அதில் 1.11 கோடி குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகையை மறுப்பது நியாயமல்ல என்று சாடியுள்ளார்.