உடற்பயிற்சி செய்தால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது உண்மை. உடற்பயிற்சிகளில் பல உண்டு. உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று பயிற்சி செய்வது அல்லது வீட்டின் அருகில் இருக்கக்கூடிய மைதானம் உள்ளிட்ட இடங்களில் ஓடுவது உள்ளிட்ட உடற்பயிற்சிகளை மேற்கொள்வது. அதேபோல் தற்போது இணையத்தில் கலிஸ்தெனிக்ஸ் என்ற உடற்பயிற்சி சமீப காலமாக  பலர் செய்வதை பார்த்து வருகிறோம்.  உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் கலிஸ்தெனிக்ஸ் ல் அதீத பயிற்சி பெற்று பல்வேறு விதமான அசத்தலான உடற்பயிற்சிகளை செய்து அதை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

அப்படி ஒரு வீடியோ தற்போது இரண்டு கோடிக்கும் அதிகமான நபர்களால்  பார்க்கப்பட்டுள்ளது. அதில் ஒரு கையை செங்கலிலும்   மற்றொரு கையை ஒரு துணியின் மறுமுனையில் பிடித்து அந்தரத்தில் பறப்பது போல் வைத்துக் கொண்டு ஒரு காலை செங்கலிலும் மற்றொரு கால் அந்தரத்திலும் இருக்கும்படி புஷ் அப்  எடுக்கிறார். முதலில் அதைப் பார்க்கையில் ஏதோ கம்பு ஒன்று கையில் வைத்திருப்பது போல் தெரிகிறது.

ஆனால் வீடியோவின் முடிவில் தான் தெரிய வருகிறது அவர் கையில் வைத்திருப்பது பிளாஸ்டிக்கோ அல்லது கம்போ , இரும்பு கம்பியோ அல்ல அது சாதாரண துணி என்று இவரது இந்த அசத்தலான திறமையை பலரும் பாராட்டி வருகின்றனர்.