
நாடு முழுவதும் தக்காளி விலை அதிகரித்து வருகிறது. தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் ஒரு சிலர் லட்சாதிபதியாகவும் கோடீஸ்வரராகவும் ஆகி வருகிறார்கள் அந்த அளவிற்கு தக்காளி விலை தாறுமாறாக எகிறி உள்ளது சில நேரங்களில் தக்காளியை கல்யாண பரிசாக கொடுக்கும் பழக்கமும் வந்துள்ளது. இந்த நிலையில் சென்னை கொளத்தூர் கணபதி ராவ் நகரில் உள்ள டீக்கடைக்காரர் ஒருவர் ஒரு டீ வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என்று அறிவிப்பை வெளியிட்டார்.
இதனையடுத்து அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் மக்கள் கூட்டத்திற்கு அந்த கடைக்காரர் போலீஸ் பாதுகாப்பு முன்பே போட்டிருந்தார். ஒரு டீ பன்னிரண்டு ரூபாய்க்கு வாங்கி 180 ரூபாய் விற்கும் தக்காளியை விற்பனை செய்தால் கூட்டம் அலைமோத தான் செய்யும். இதை சுதாரித்துக்கொண்ட கடைக்கு வரும் 100 டோக்னுக்கு மட்டும்தான் தக்காளி இலவசம் என்று கூறி அவர்களுக்கு மட்டும் தக்காளி வழங்கியிருக்கிறார்.