தமிழகத்தில் தற்போது மொத்தமாக 5289 டாஸ்மாக் கடைகள் இயங்கி வரும் நிலையில் ஒரு நாளைக்கு மட்டும் அரசுக்கு கோடை கணக்கில் வருமானம் கிடைக்கின்றது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை நவீன முறையில் மாற்றம் செய்ய அரசு தற்போது பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 மதுபான கடைகள் வீதம் தமிழகம் முழுவதும் சுமார் 200 மதுபான கடைகள் நவீனமயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபான கடைகளில் 90எம்எல் பேக்கிலும் மதுபானங்களை விற்பனை செய்வது குறித்து தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் மதுக்கடைகளின் நேரத்தை மாற்றியமைப்பது குறித்து அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் டாஸ்மாக் கடைகளில் அரசியல் நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.