உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில் வாட்ஸ்அப் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது ஜூலையில் 72 லட்சம் இந்திய கணக்குகள் தடை செய்யப்பட்டன. தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 இன் படி பயனர் பாதுகாப்பு அறிக்கையின்படி இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று நிறுவனம் வெளிப்படுத்தியது. அந்த மாதத்தில் 72,28,000 வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டதாகவும், 31,08,000 கணக்குகள் எந்த புகாரும் இல்லாமல் தடை செய்யப்பட்டதாகவும் மெட்டா நிறுவனம் கூறியுள்ளது. அரசு விதிமுறைகளை மீறி செயல்பட்ட புகாரிலும் பல கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.