இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில்  கூகுள் பே மற்றும் ஃபோன் பே மாதிரியான தளங்களில் இனி Pre – sanctioned credit line வசதியை ஏற்படுத்த ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. அதாவது இந்த யுபிஐ அப்ளிகேஷன்களை இனி கிரெடிட் கார்டு போல பயன்படுத்தலாம். உங்களது வங்கிகள் உங்கள் தகுதிக்கேற்ப அதிகபட்ச தொகையை முன்கூட்டியே நிர்ணயிக்கும்.

அதன் பிறகு உங்கள் வங்கிக் கணக்கில் பணமே இல்லாவிட்டாலும் கூட யுபிஐ மூலம் கிரெடிட் தொகையினை செலவு செய்யலாம். இதனால் யுபிஐ கட்டணங்கள் மேலும் விரிவடையும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.