சோசியல் மீடியாவில் ஏராளமான வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில் நீதிமன்ற விசாரணையின் போது எடுக்கப்பட்ட வீடியோ வேகமாக பரவி வருகிறது. திருமணமான ஒரு மாதத்தில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஒரு இளம்பெண் தனது கணவரை விட்டு பிரிந்து செல்ல முடிவு எடுத்ததாக தெரிகிறது. அந்த பெண் தனது கணவரிடம் 40 லட்சம் ரூபாய் பணத்தை ஜீவனாம்சமாக கேட்டுள்ளார். நீதிமன்றத்தில் அந்த இளம் பெண்ணின் கணவருக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் எனது கட்சிக்காரரால் அவரது மனைவிக்கும் 30 லட்சம் ரூபாய் பணத்திற்கு மேல் கொடுக்க முடியாது.

அவர் 30 லட்சம் ரூபாய் பணத்தை கொடுக்க தயாராக இருக்கிறார். ஆனால் அவரது மனைவி 40 லட்சம் வேண்டும் என கேட்கிறார். அதை அவரால் கொடுக்க முடியாது என கூறுகிறார். கடந்த மார்ச் மாதம் 5-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது முதலில் அந்த இளம் பெண்ணின் கணவர் 15 லட்சம் ரூபாய் பணத்தை ஜீவனாம்சமாக கொடுக்க ஒப்புக்கொண்டார். அதன் பிறகு அடுத்த கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்ததால் 30 லட்சம் ரூபாய் பணத்தை கொடுக்க ஒப்புக் கொண்டார்.

ஆனால் இளம் பெண் 40 லட்ச ரூபாய் பணம் கேட்பதால் இரு தரப்புக்கும் மோதல் போக்கு நிலவுகிறது. அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அதனை பார்த்த நெட்டிசன்கள் சமூகத்திலும் சட்டத்திலும் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான அந்தஸ்து உள்ளது. அப்படி இருக்கும் போது அந்த பெண் ஏன் ஜீவனாம்சம் கேட்க வேண்டும்? தன்னை தானே பராமரித்துக் கொள்ளும் திறன் அவரிடம் இல்லையா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் சிலர் இவ்வளவு பணம் ஜீவனாம்சம் கேட்பதற்கு அந்த பெண் திருமணத்திற்கு அதிகமாக செலவு செய்திருப்பார் போல என கமெண்ட் செய்து வருகின்றனர்.