இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த மே 19ஆம் தேதி அறிவித்தது. அதனை வங்கிகளில் மாற்றுவதற்கான காலக்கெடு அக்டோபர் 7ஆம் தேதி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2000 ரூபாய் நோட்டுக்களை legal tender ஆகவே நீடிக்கும். நாட்டில் உள்ள 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் அதனை மாற்றிக் கொள்ளலாம் எனவும் மற்ற வங்கிகளில் மாற்ற முடியாது என்றும் அறிவித்துள்ளார்.