இந்தியாவில் மக்கள் பலரும் எதிர்காலத்தில் நிதி சுமை ஏற்படாமல் இருப்பதற்காக அதிக அளவு தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். வங்கிகள் பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்கி வந்தாலும் அஞ்சல் துறை சேமிப்பு திட்டங்கள் மக்களின் விருப்பமான ஒன்றாக மாறிவிட்டது. நான் முதலீடு செய்யும் பணத்திற்கு இந்திய தபால் நிலையம் அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது. அதாவது தபால் நிலையத்தில் உள்ள பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 6.80 சதவீதம் முதல் 7.50 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

அதனைப் போலவே போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கு திட்டத்தில் வருடத்திற்கு நான்கு சதவீதம் வட்டி கிடைக்கிறது. ஐந்து வருட போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் அக்கவுண்ட் திட்டத்தில் வருடத்திற்கு 6.5 சதவீதம் வட்டி கிடைக்கின்றது. போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் அக்கவுண்ட் திட்டத்தில் வருடத்திற்கு 6.9% வட்டியும் இரண்டு மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு ஏழு சதவீதம் மட்டும் வழங்கப்படுகிறது. மேலும் போஸ்ட் ஆபீஸ் மன்த்லி இன்கம் ஸ்கீம் அக்கவுண்ட் திட்டத்தில் ஆண்டுக்கு 7.40 சதவீதம் வட்டியும் சீனியர் சிட்டிசன் சேவிங் ஸ்கீம் திட்டத்தில் ஆண்டுக்கு 8.2% வட்டியும் கிடைக்கின்றது. அதனைப் போலவே 15 வருட பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் அக்கவுண்ட் திட்டத்தில் ஆண்டுக்கு 7.1 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.