
தாய்லாந்தில் உள்ள ஹோட்டல் அறையில் இருதயக்கோளாறு காரணமாக கடந்த 2022ஆம் ஆண்டு உயிரிழந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னின் மரணம் தொடர்பாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பிரபல பத்திரிகை வெளியிட்ட செய்தியின் படி, சம்பவ இடத்தில் ‘Kamagra’ என்ற வலிமை வாய்ந்த விந்து ஊக்க மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதனை போலீசார் மேலதிக உத்தரவின் பேரில் அங்கிருந்து அகற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மருந்து இருதயக் கோளாறுள்ளவர்களுக்கு மிகவும் ஆபத்தானது என்றும், வார்னின் மரணத்தில் இது ஒரு முக்கிய காரணியாக இருந்திருக்கலாம் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் அதிகாரபூர்வமாக இதை எவரும் உறுதி செய்ய தயாராக இல்லை. இந்த விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய உயர் அதிகாரிகளும் சூழ்நிலையை மறைக்க முயன்றதாக கூறப்படுகிறது.