தமிழகத்தில் கடந்த  சில தினங்களுக்கு முன்பாக ஷவர்மா சாப்பிட்டு மாணவி ஒருவர் உயிரிழந்ததையடுத்து ஹோட்டல்களில் உணவு பாதுகாப்பு துறையினரால்  சோதனை நடத்தி வருகிறார்கள். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்வதாக தகவல் வந்தததையடுத்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திருப்பூர் மாவட்டம் பொள்ளாச்சி சாலை தாராபுரம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்கள்.

அதில் செயற்கை வண்ணம், கலக்கப்பட்ட சிக்கன் பரோட்டா அதோடு அரசால்  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்ட நோட்டீஸும் வழங்கப்பட்டது. உணவகங்களில் தரமற்ற உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தால் பொதுமக்கள் 9444042322  என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.