இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறும், இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் விதமாகவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடத்திட்டங்கள் அவ்வப்போது மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பொறியியல் பாடத்திட்டங்களில் மாற்றியமைக்க உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.  இதற்காக 90 பேர் அடங்கிய தனி குழு உருவாக்கப்பட்டு விரைவில் புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும் என்று சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவிக்க தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்ஜினியரிங் பாடத்திட்டத்தில் கம்ப்யூட்டர் கேமின் மற்றும் காமிக்ஸ் ட்ராபிக்  உள்ளிட்ட  அம்சங்களை சேர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது . தற்பொழுது பொழுதுபோக்கு துறை பள்ளி, கல்லூரி பாடங்களுக்கான அனிமேஷன் வீடியோ தயாரிப்பு போன்றவற்றில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் போன்ற  பாடப்பிரிவில்  முக்கிய இடத்தை பிடிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.