தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். அதன்பிறகு இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் நிலையில் முகுந்தன் என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் ஹே மின்னலே பாடல் நேற்று வெளியானது. இது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் 700 வது பாடல் ஆகும். இந்த பாடலை கார்த்திக் நேதா எழுதியுள்ள நிலையில், ஸ்வேதா மேனன் மற்றும் ஹரிச்சரண் இணைந்து பாடியுள்ளனர். மேலும் இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.