உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 2025 ஐபிஎல் தொடரின் நடுவில், பாகிஸ்தான் தனது டி20 லீக் போட்டியான பிஎஸ்எல் தொடருக்கும் தீவிரமாகத் தயார் செய்து வருகிறது. பாகிஸ்தானில் ஏப்ரல் 11 முதல் தொடங்க உள்ள பிஎஸ்எல் 10வது  ஆண்டில் , கராச்சி கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக முன்னாள் ஆஸ்திரேலிய ஓப்பனர் டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் அந்த அணியின் கேப்டனாக இருந்த பாகிஸ்தான் டெஸ்ட் அணித் தலைவர் ஷான் மசூத்தின் இடத்தில்தான் வார்னர் வருகிறார்.

2020ஆம் ஆண்டு பிஎஸ்எல் கோப்பை வென்ற கராச்சி கிங்ஸ், அதன் பின் பரிதாபமான ஆட்டத்துடன் லீக் சுற்றத்தைக் கடக்க முடியாமல் தவித்துள்ளது. 2024 பிஎஸ்எல் தொடக்கத்திற்கு முன் ஷான் மசூத் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தாலும், அணி வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, 6 போட்டிகளில் தோல்வியுற்றது. அதேசமயம், ஷான் மசூத்தின் ஆட்டமும் பலவீனமாக இருந்ததால், வெறும் 158 ரன்களையே 10 இன்னிங்ஸ்களில் எடுத்தார். இது அணியின் பேட்டிங் பக்கவாட்டையும் பாதித்தது.

“>

 

2024 டி20 உலகக் கோப்பைக்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டேவிட் வார்னரை, 2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலிருந்து விலக்கியது. அதன்பின் ஏலத்தில் எந்த அணியும் அவரை தேர்வு செய்யாததால், வார்னர் ஐபிஎல் 2025 தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அவர் பிஎஸ்எல் டிராஃட்டில் கலந்து கொண்ட போது, கராச்சி கிங்ஸ் அணி அவரை தேர்ந்தெடுத்து கேப்டனாக நியமித்தது. இதன் மூலம், வார்னர் தனது பிஎஸ்எல் அறிமுகத்தை சுறுசுறுப்பாக தொடங்க உள்ளார். இவரின் வருகை  பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது.