இந்தியாவில் கடந்த வருடம் அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பங்குமுறை கேட்டில் பெரிய அளவில் ஈடுபட்டு இருப்பதாக பரபரப்பு குற்றசாட்டினை வைத்தது. இதைத்தொடர்ந்து  அந்த நிறுவனத்தின் பங்குகள் பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்தது. இதைத்தொடர்ந்து தற்போது அதானி நிறுவனம் பங்கு முறை கேடுகளுக்காக பெர்முடா மற்றும் மொரிஷியஸ் ‌ நிறுவனங்களில் உள்ள பங்குகளை பயன்படுத்தியதாக நிறுவனம் கூறிய நிலையில் அதே நிறுவனத்தில் இந்திய பங்குச் சந்தையை ஒழுங்கப்படுத்தும் செபி நிறுவனத்தின் தலைவர் மற்றும் அவருடைய கணவருக்கும் பங்குகள் இருப்பதாக தற்போது ஹிண்டன்பர்க் குற்றசாட்டினை கூறியுள்ளது. ‌

இதன் காரணமாகத்தான் அதானி குழும பங்குமுறைகேடுகள் குறித்து செபி விசாரிக்கவில்லை எனவும் ஹிண்டன்பர்க் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த குற்ற சாட்டுகளை முற்றிலும் செபி தலைவர் மறுத்துள்ளார். இது தொடர்பாக செபி தலைவர் மாதபி பூரி‌ புச் கூறும்போது எங்களுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஹிண்டன் பர்க் முன் வைத்துள்ளது. அதோடு எங்களுடைய முதலீடுகள் வெளிப்படையாக இருப்பதாகவும் எங்கள் வாழ்க்கையும் நிதியும் ஒரு சிறந்த புத்தகம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இதைத்தொடர்ந்து அவர்களின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தை தற்போது protect mode-க்கு மாற்றியுள்ளனர்