கடலூர் மாவட்டம் வைத்தியநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராசு. இவரது மகன் அசோக் குமார். கடந்த ஜனவரி மாதம் 1-ஆம் தேதி அசோக் குமாருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கரடி சித்தூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றதாக தெரிகிறது.

தற்போது அந்த சிறுமி ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார். சமீபத்தில் சிறுமி திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றபோது மருத்துவர்கள் சிறுமியின் வயது குறித்து விசாரித்ததில் உண்மை தெரியவந்தது.

இதுகுறித்து மருத்துவர்கள் திட்டக்குடி மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அசோக்குமார், அவரது தாய் சுசிலா, சிறுமியின் தந்தை முருகேசன், தாய் செல்வி, அண்ணன் வெங்கடேசன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.