ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர விருப்பம் தெரிவித்ததாக குஜராத் டைட்டன்ஸ் கிரிக்கெட் இயக்குனர் விக்ரம் சோலங்கி கூறியுள்ளார். 

இந்திய டி20 கேப்டன் ஹர்திக் பாண்டியாவை தங்கள் அணியில் சேர்த்துக்கொள்வதில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றுள்ளது. ஹர்திக் தலைமையில் தனது முதல் ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்ன்ஸ் அணி சாம்பியன் ஆனது . கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை அணியில் இடம்பிடித்துள்ளார். அதிரடி பேட்ஸ்மேன் சுப்மன் கில்லிடம் குஜராத் தலைமை பொறுப்பை ஒப்படைத்துள்ளது. ஹர்திக் பாண்டியா 2015 முதல் மும்பை அணியில் இருந்தார். பின்னர் 2022ல் குஜராத் அணியின் கேப்டனானார். அதன் பிறகு மீண்டும் மும்பை அணியில் இணைந்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா குஜராத்தை விட்டு வெளியேறியது ஏன்?

ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் பதவியை விட்டுவிட்டு மும்பைக்காக காத்திருந்தது ஏன்? இது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு குஜராத் டைட்டன்ஸ் கிரிக்கெட் இயக்குனர் விக்ரம் சோலங்கி பதில் அளித்துள்ளார். ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர விருப்பம் தெரிவித்திருந்ததாகவும், அவருடைய முடிவை நாங்கள் மதிப்பதாகவும் கூறினார். அவர் கூறியதாவது, “குஜராத் டைட்டன்ஸ் அணியின் முதல் கேப்டனாக, ஹர்திக் பாண்டியா 2 அற்புதமான சீசன்களை வழங்க உதவினார், இதன் காரணமாக ஒரு டாடா ஐபிஎல் சாம்பியன்ஷிப்பை வென்றது மற்றும் ஒரு இறுதிப் போட்டியில் தோற்றது. ஹர்திக் தலைமையில் குஜராத் சிறப்பாக செயல்பட்டது. அவர் இப்போது தனது அசல் அணியான மும்பை இந்தியன்ஸுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்தார். அவரது முடிவை மதித்து, அவரது எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.

ஹர்திக் தலைமையில் குஜராத்தின் அற்புதமான ஆட்டம் :

ஐபிஎல் 2022 இல், குஜராத் அணி முதல் முறையாக நுழைந்தது. ஹர்திக் தலைமையில் முதல் சீசனில் குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பிறகு, 2023 சீசனில் குஜராத் ரன்னர்-அப் நிலைக்குத் திருப்தி அடைய வேண்டியிருந்தது. சென்னைக்கு எதிரான இறுதிப் போட்டியில் குஜராத் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. கடைசி பந்தில் சென்னை அணி திரில் வெற்றி பெற்று குஜராத்தின் கோப்பை கனவை உடைத்தது.

மும்பை அணியில் ஹர்திக் :

ஞாயிற்றுக்கிழமை (நவ.,26ஆம் தேதி) இரவு ஒப்பந்தம் இறுதியாக சீல் செய்யப்பட்டது, இது ஐபிஎல்லின் மிகப்பெரிய முன்னேற்றங்களில் ஒன்றாகக் காணப்பட்டது. இதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா, இனி தனது சொந்த அணியான மும்பையுடன் இணையவுள்ளார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை மாலை சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது. முன்னதாக ஹர்திக்கை குஜராத்தில் வைத்து இருப்பதாக ஒரு செய்தி வந்தது. இருப்பினும், இப்போது ஹர்திக் மும்பை திரும்புவார் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 19ம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது, அதற்கு முன் டிச.12ம் தேதி வரை வீரர்களை மாற்றிக் கொள்ள அணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இப்போது ஹர்திக் மும்பை அணிக்கு திரும்புவதற்கான அனைத்து நடைமுறைகளும் முடிந்துவிட்டன.

ஐபிஎல்-ல் ஹர்திக்கின் ஆட்டம் :

ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஹர்திக் பாண்டியா இதுவரை 123 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் மும்பை மற்றும் குஜராத் அணிக்காக 145.86 ஸ்ட்ரைக் ரேட்டில் 2309 ரன்கள் எடுத்துள்ளார். பந்துவீச்சிலும் 53 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.