தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமல்ஹாசன்.இவர் இறுதியாக கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ரசிகர்களின் எதிர்பார்ப்பை அல்லிய இந்த திரைப்படம் சுமார் 450 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. கமல்ஹாசன் கலந்த 1986 ஆம் ஆண்டு நடித்த விக்ரம் திரைப்படத்தில் இளையராஜா இசையில் தனது சொந்த குரலில் பாடிய பாடல் விக்ரம் விக்ரம் என்ற பாடல்.

மிகவும் பிரபலமான இந்த பாடலின் தீம் மியூசிக்கை ரீமேக் செய்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படத்திலும் பயன்படுத்து இருந்தார் அனிருத். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் கமலின் மகளான ஸ்ருதிஹாசன் தற்போது ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவின் நடுவே கமல்ஹாசன் என்ட்ரி கொடுத்த நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Shruti Haasan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@shrutzhaasan)