
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைக்கிறது என்று விமர்சனம் செய்துள்ளார். இன்று கோவையில் விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக ஆட்சியில் 85 சதவீதம் அத்திக்கடவு அவிநாசி திட்டம் முடிவடைந்து விட்டது. அதனை திமுக கிடைப்பில் போட்டது. அதிமுக ஆட்சியின் போது தான் 6 இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டது.
திமுக அரசு அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை வேண்டுமென்றே முடக்கியுள்ளது. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைக்கிறது என்றார். மேலும் எதிர்க்கட்சித் தலைவரை கரப்பான் பூச்சியை போன்று ஊர்ந்து சென்று பதவி வாங்கியவர் என்று தன் பதவியை மறந்து முதல்வர் விமர்சனம் செய்வதாகவும் அதிமுகவினர் இதுபோன்று யாரையும் விமர்சிக்கவில்லை எனவும் தங்களை பற்றி விமர்சிப்பவர்களுக்கு மட்டும்தான் பதிலடி கொடுத்து வருவதாகவும் கூறினார்.