உலகின் 2 வது பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் “ஸ்பேஸ் எக்ஸ்” என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவினார். இதில் தற்போது “ஸ்டார்ஷிப்” என்ற ராக்கெட் அமைப்பு உருவாக்கப்பட்டு வருகின்றது. இந்த ஸ்டார்ஷிப் வகையைச் சேர்ந்த ராக்கெட் தான் மனிதர்களை பிற கிரகத்திற்கு அழைத்துச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டு வருகின்றது. இந்த ராக்கெட்டை தான் நாசா நிலவுக்கு மனிதர்களை அழைத்துச் செல்வதற்காக தேர்ந்தெடுத்துள்ளது.

இது குறித்து கடந்த மாதம் எலான் மஸ்க் பயனரின் ட்விட்டிற்கு பதிலளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது ஸ்டார்ஷிப்பை அடுத்த மாதம் விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மேலும் ஸ்டார்ஷிப்பில் மீதமுள்ள சோதனைகள் அனைத்தும் சரியாக நடந்தால் அதனை அடுத்த மாதம் தொடங்க முயற்சிப்போம்” என கூறியிருந்தார்.