
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே பெட்டை குளம் என்ற பகுதி உள்ளது. இங்கு கட்டிட தொழிலாளியான ஜேக்கப் சுதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஞான செல்வி என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு ஜெபராஜ் என்ற மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் மகன் தன் தந்தையுடன் தூத்துக்குடியில் வசித்து வரும் நிலையில் மகள் தாயுடன் பெட்டை குளத்தில் இருந்துள்ளார். இதில் மகள் ஒரு அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இவர் நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று கூறியதால் தாய் கண்டித்தார். பின்னர் தாய் வேலைக்கு சென்று விட்ட நிலையில் மகள் மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது தாய் திட்டியதால் வேதனையில் அந்த சிறுமி தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து மாலை நேரத்தில் வீட்டிற்கு திரும்பிய தாய் தன்மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அலறி துடித்தார். இது குறித்த தகவலின் பெயரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.