
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் மாவட்டத்தில் தர்மேந்திர தாக்கூர் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் சம்பவ நாளில் தன்னுடைய டிராக்டரில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு தண்ணீர் கொண்டு சென்றுள்ளார். அவருடன் 6 சிறுவர்களும் உடன் சென்றனர். அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் தர்மேந்திர தாகூர் மற்றும் 4 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பிறகு விபத்தில் படுகாயம் அடைந்த 2 சிறுவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடத்தி முதல் கட்ட விசாரணையில் ஓட்டுநரின் கவனக்குறைவு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.