நாமக்கல் மாவட்ட உணவகங்களில் ஷவர்மா, கிரில் மற்றும் தந்தூரி உள்ளிட்ட உணவுகளை விற்பனை செய்ய உணவு பாதுகாப்பு துறை அனுமதி அளித்துள்ளது. உணவுகளில் இரசாயனம் சேர்க்கக்கூடாது இறைச்சி உணவுகளை இருப்பு வைத்து இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட உடல் நலம் பாதிக்கப்பட்டு 14 வயது சிறுமி உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கெட்டுப்போன சவர்மா விற்பனை செய்த உணவக உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா விற்பனைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளது.