தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீஸ் ஆகிறது.

படத்தின் டீசர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது படத்தில் நடிகை ரம்யா இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கும் நிலையில் அனிருத் இசையமைக்கிறார். மேலும் நடிகர் அஜித் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.