தாம்பரம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் பாந்த்ராவில் இருந்து வேளாங்கண்ணிக்கு  ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரத்திலிருந்து ஆகஸ்ட் 28ஆம் தேதி இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்புரையில் மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மருமகமாக ஆகஸ்ட் 29ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் இந்த ரயில் மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

மேலும் இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணி சென்றடையும் எனும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே மகாராஷ்டிரா மாநிலம் பாந்த்ராவில் செப்டம்பர் 7ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.