மத்திய பிரதேஷ் மாநிலத்தில் இருக்கும் சீட் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு மூன்று மாணவிகள் நேர்காணலில் பங்கேற்க சென்றுள்ளனர். சஞ்சீவ் குமார் என்பவர் தான் நேர்காணலை மேற்கொண்டார். இந்நிலையில் நேர்காணல் முடிந்து சில மணி நேரங்களில் மூன்று மாணவிகளின் whatsapp எண்ணிற்கும் சஞ்சீவ் குமார் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

அதில் அவர் வேலை வேண்டும் என்றால் ஒரு இரவை தன்னுடன் கழிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சீட் கார்ப்பரேஷன் தலைவர் கோயல் சஞ்சீவ் குமாரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.