கிருஷ்ணகிரி மாவட்டம் அணுசோனை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் வேன் டிரைவராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி ஜோதிகா. இவர் பி.செட்டி பள்ளி பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

கடந்த 12-ஆம் தேதி வேலைக்கு சென்ற ஜோதிகா மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சசியடைந்த வெங்கடேஷ் தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளார்.

ஆனால் ஜோதிகாவை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சசி என்பவர் ஜோதிகாவை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனால் சசியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.