தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராக இருப்பவர் மன்சூர் அலிகான். தன்னுடைய அபாரமான நடிப்பு திறமையின் மூலம் தொடர்ந்து திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த வருடம் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் போட்டியிட்டார். நேற்றைய தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் டெபாசிட் இழந்து மோசமான தோல்வியை சந்தித்துள்ளார். அவருக்கு மொத்தமாக 2608 வாக்குகள் கிடைத்துள்ளது. அந்த தொகுதியில் நோட்டாவுக்கு 8027 வாக்குகள் கிடைத்திருந்த நிலையில் அதைவிட குறைவாக தான் அவருக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் அவர் டெபாசிட் இழந்து தோல்வியடைந்துள்ளார்.