
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிரபல குணச்சித்திர நடிகர் ஆன ஸ்ரீமன் வசிக்கும் கோடம்பாக்கம் வீட்டில் மழை நீர் புகுந்தது. இதனால் வீட்டை காலி செய்து குடும்பத்துடன் வேறு பகுதியில் இருக்கும் தனது மற்றொரு வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, வேற வழியில்ல. ஓரளவுக்கு கனித்து சொல்லிட்டாங்க.
ஆனா இந்த அளவு தான் தண்ணீர் வரும் என்று நமக்கு எப்படி தெரியும்? எங்களுக்கு இன்னொரு வீடு இருப்பதால் அங்கு செல்கிறோம். இந்த விஷயத்தில் யாரையும் குறை சொல்ல முடியாது. ஒரு நாளுக்கு பெய்த மழையை 20 நாட்களுக்கான மழை போல உள்ளது. குறை சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். எங்களுக்கு வீடு இருக்கு நாங்க போறோம். இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க? அடுத்த வருஷம் இது இல்லாமல் பார்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார்.