ஐபிஎல் வரலாற்றில் 6-வது முறையாகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் காண உள்ளது. அந்த அணியின் வெற்றிக்குத் தூணாக இருப்பவர் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. இதுவரை 145 இன்னிங்ஸ்களில் விளையாடி 183 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணியின் வெற்றிகரமான பந்துவீச்சாளராக அவர் வலம் வருகிறார்.

ஆனால், அதே வேளையில் பும்ராவின் பெயரில் ஒரு வேண்டாத சாதனையும் ஒட்டிக்கொண்டுள்ளது ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் தொடரில் அதிக ‘நோ-பால்’ வீசிய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் பும்ரா முதலிடத்தில் இருக்கிறார் என்பதுதான் அந்த அதிர்ச்சித் தகவல்.

​இதுவரை தான் விளையாடிய போட்டிகளில் பும்ரா 32 முறை நோ-பால்களை வீசியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக உமேஷ் யாதவ் 24 நோ-பால்களுடனும், இஷாந்த் சர்மா 23 நோ-பால்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்று 5 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இந்த முறை ஒவ்வொரு ரன்னும் மிக முக்கியமானது.

எனவே, இதுபோன்ற சிறிய தவறுகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், பும்ரா தனது நோ-பால் வீசும் பழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.