
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. அப்படி செல்போன் பயன்படுத்தும் அனைவரும் சிம் கார்டு பயன்படுத்தும் நிலையில் கடைக்குச் சென்று ரீசார்ஜ் செய்யும் காலம் போய் தற்போது தங்கள் செல்போன் மூலமாகவே பயன்படுத்தி ரீசார்ஜ் செய்து விடுகின்றனர். ஆனால் ஒரு சில நேரங்களில் நாம் தவறுதலாக வேறு ஒரு நம்பருக்கு செல்போன் ரீசார்ஜ் செய்து விடுகிறோம்.
அப்படி இருக்கும்போது ரீசார்ஜ் செய்ததற்கான மெசேஜ் இருந்தால் போதும், அதில் உள்ள Transaction ID, ரீசார்ஜ் செய்யப்பட்ட நம்பர் மற்றும் பணம் செலுத்தப்பட்ட நம்பர் ஆகியவற்றை நமது சிம் கார்டு நிறுவனத்திற்கு மெயில் மூலம் அனுப்பி புகார் அளிக்கலாம். இரண்டு அல்லது மூன்று நாட்களில் அந்த மெயிலுக்கு பதில் வரும். அவர்களிடம் நீங்கள் முறையான தகவலை கூறினால் ரீசார்ஜ் செய்யப்பட்ட பணம் திரும்பி கிடைக்க வாய்ப்புள்ளது.