
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பரேலி பகுதியில் முர்ஷத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஆனம் என்ற மனைவியும், இரண்டரை வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். இதில் கடந்த 21ஆம் தேதி 2 1/2 வயது குழந்தை மாடியிலிருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்துவிட்டது. குழந்தை தவறுதலாக மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்துவிட்டதாக தந்தை நினைத்திருந்த நிலையில் அதன் பின் உண்மை தெரிய வந்தது. அதாவது கடந்த 26 ஆம் தேதி முர்ஷத் சிசிடிவி கேமராவை பார்த்துள்ளார். அப்போது தன் மனைவி மகளை மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்தது தெரிய வந்தது.
அதாவது அவருடைய மனைவிக்கு வேறு ஒருவருடன் தகாத உறவு இருந்துள்ளது. இதனால் அந்த குழந்தை உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததால் மாடியில் இருந்து கீழே போட்டு கொலை செய்தது தெரிய வந்தது. வீட்டில் முர்ஷத் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு அவர் வந்து சென்றுள்ளனர். இது தொடர்பாக குழந்தை தன் தந்தையிடம் கூறியுள்ளது. இதனால்தான் ஆத்திரத்தில் அந்த குழந்தையை ஆனம் கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் தற்போது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.